நடக்கும் என்று நினைத்துக் கொண்டு நடக்கும் என்பதில் நம்பிக்கை வைத்துக் கொண்டு விடா முயற்சி செய் வெற்றி நிச்சயம் ஒரு நாள் உன்னை தேடி வரும். தன்னால் முடியாது என்று நினைப்பவன் வெற்றி பெற தவறிவிடுகிறான்.. தன்னால் முடியும் என்று நம்பிக்கை வைத்து முழு முயற்சியோடு பாடுபடுபவன் மற்றவர்கள் விட்ட வெற்றியையும் சேர்த்து பெற்றுக் கொள்வான். மண்ணில் விழுவது அவமானம் இல்லை விழுந்தால் முயற்சி செய்து விதையாக மாறி பெரு விருட்சமாக எழு. உன்னால் முடியும் வரை முயற்சி செய்.. உன்னால் முடியாது போனால் பயிற்சி செய். முயற்சி செய்ய சிறு நொடி கூட தயங்காதே முயற்சி செய்யும் போது தடைகளும் உன்னை தலை வணங்கும்…!!!இக்கவிதைகளை போலவே இதிலுள்ள ஒவ்வொரு கவிதையும் அழகு. இந்த கவிதை அந்த கவிதை என்று சொல்ல முடியா வண்ணம். இதில் உள்ள கவிதைகளில் வெற்றி, தோல்வி, ஏதேனும் ஒரு விஷயத்தில் தோல்வியடைந்து விட்டோம் என்றால் அதிலிருந்து எப்படி மீள்வது , இப்போதைய சமுதாயத்தின் நிலை, பெண்களின் நிலை, விடாமுயற்சி, விவசாயம், காதல்,நட்பு, நம்பிக்கை,உறவுகள், தாய்மை, அம்மா, அப்பா….இவையனைத்தையும் “பாரதி மகளின் பாசக் கவிதைகள் “ என்ற இத்தொகுப்பிலுள்ள சிறுகவிதைகளில் நீங்கள் காணலாம்..!!!