பழந்தமிழகம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பு முதல் தற்போது வரை எப்படி இருந்தது என்பதை இந்த வரலாற்று நூல் தெள்ளிதின் முன்வைக்கிறது. தமிழக வரலாறும் தமிழ்ப் பண்பாடும் மிகப்பழமை வாய்ந்தவை. தமிழ்நாட்டின் வரலாற்றில் கலந்த பிற பண்பாடுகள் குறித்த செய்தியையும் இந்நூலாசிரியர் முன்வைக்கிறார். சேர, சோழ மற்றும் பாண்டியப் பேரரசுகளே தமிழ்ப் பேரரசுகளாக இருந்தன. தனித்தன்மை வாய்ந்த புகழோடு சோழர்கள் பழங்காலத்தில் உரோமப் பேரரசுடன் கடல்வழி வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மூவேந்தர்கள் ஆட்சி செய்துவந்த பழந்தமிழகத்தை மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர்கள் கைப்பற்றியதால் இப்பகுதியின் பண்பாடும்ஆட்சி வடிவமும் மாறியதை இந்நூலாசிரியர் தெரிவிக்கிறார்.